திருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாது திருச்சி பெல் தலைவர் பேட்டி

திருச்சி பெல் நிறுவனத்தில் பழைய ஆக்சிஜன் பிளான்ட்டில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாது திருச்சி பெல் தலைவர் பேட்டி

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து BHEL தலைவரும், பொது மேலாளருமான முரளியுடன் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பெல் காவேரி விருந்தினர் இல்லத்தில் நேரில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி பெல் தலைவரும், பொது மேலாளருமான முரளி... ஏற்கனவே பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்தது. அந்த பிளான்ட் மூலம் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய இயலாது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு வேண்டுகோளின்படி புதிய பிளான்ட் அமைப்பதற்கும் 3 லிருந்து 4 மாத காலமாகும் அடுத்து வரும் கோவிட் மூன்றாவது அலை தடுக்க ஆக்சிஜன் தேவை என்பதை கருத்தில் கொண்டு அரசுடன் ஆலோசனை நடத்தி அதற்கான பணிகளை துவங்க  விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். 


அதன் பிறகு  நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்த போது... எவ்வளவு சீக்கிரமாக புதிய யூனிட்  மூலம் ஆக்சிஜன் உற்பத்தி பிளான்ட் அமைக்க முடியுமோ அதனை செயல்படுத்துவோம் என தெரிவித்தார். தொடரும் கோவிட் தொற்று அலைகளை சமாளிக்க ஏதுவாக இருக்கும் என்றார்.

இந்நிகழ்வில் திருச்சி மாவட்டத்திலுள்ள 7 சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், கதிரவன், ஸ்டாலின் குமார், இனிகோ இருதயராஜ், அப்துல் சமது மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd