32 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ உறங்காயி அம்மன் கோவில் பெருந்திருவிழா
திருச்சி ஸ்ரீரங்கம் வட்டம், குமாரவயலூர் கிராமத்தின் அருகில் கொத்தட்டை என்னும் திவ்விய ஸ்தலத்தில் எழுந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ உறங்காயி அம்மன் காப்பு கட்டு பெருந்திருவிழா
ஏழ் தலம் புகழ் காவேரி யாற்விளை சோழ மண்டல மீதே மனோகர ராஜ கம்பீர நாடாளும் நாயக வயலூரா என்று திருப்புகழில் அருள் வடிவாகிய அருணகிரிநாதர் பாடிய தலமும், தம்மை வேண்டுவோர்க்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கும் வயலூர் வள்ளல் முருக பெருமான் ஆலயத்தின் அண்மையில் மேற்கு திசையில் சர்பந்தியின் வடக்கரையில் ஊராங்குளமும் உறங்காபுளியும் நிலைபெற்ற கொத்தட்டை என்னும் கிராமத்தில் கிராம தேவதையாய் நன் மக்களுக்கு இஷ்ட பங்கு தெய்வமாய்
அருள்பாலிக்கும் உறங்காயி அம்மன் என்ற பராசக்தி ஈர்ப நதியில் வந்த கார்கோடன் என்ற சர்ப்பத்தை தண்டித்து அருள் வடிவாகி இக்கொத்தட்டையில் என் ஆலயத்தின் அருகாமையில் உள்ள திரக்குளத்தில் மூழ்கி என் திரமுன்னே நின்று பிரார்த்தித்த மக்களுக்கு எந்த கொடிய விஷத்தையும் நீக்கி அருள் பாலிப்பேன் என்றும் வேண்டிய வரங்களை கொடுத்து ரஷிக்கும் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஸ்வரூபான ஸ்ரீ மஹாகணபதி மற்றும் ஸ்ரீ உறங்காயி அம்மன், ஸ்ரீ புலியடி கருப்பு, ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கொத்தட்டை கிராம காப்புகட்டு பெருந்திருவிழா செய்ய இருப்பதால் பக்தர்களும், பொதுமக்களும் அம்பாளின் அருள் பெற்று திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.
வைகாசி 16 - (30.05.2023) - இரவு முதல் காப்பு கட்டுதல்,
வைகாசி 23 - (06.06.2023) - இரவு மறு காப்பு கட்டுதல்
வைகாசி 24 - (07.08.2023) - காளிவட்டம், சுத்தபூஜை
வைகாசி 25 - (08.08.2023) - கிடாவெட்டுதல் மற்றும் படுகளம்
வைகாசி 26 - (09.06.2023) - மஞ்சள் நீர் மற்றும் சாமி குடிபுகுதல்
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn