திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 598 வழக்குகள் பதிவு - மாநகர காவல் ஆணையர் பேட்டி

திருச்சியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக 598 வழக்குகள் பதிவு - மாநகர காவல் ஆணையர் பேட்டி

திருச்சி மாநகர காவல் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக மாநகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாநகரில் கோட்டை, பாலக்கரை, காந்தி மார்க்கெட் உள்ளிட்ட காவல் சரக்கத்திற்கு உட்பட்ட மூன்று கடைகளை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி... திருச்சி மாநகரில் தொடர்ந்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்படும். தயவு தாட்சனையின்றி கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

தொடர் நடவடிக்கையாக இந்த ரைடு தொடரும் என்றார். இதுவரை இந்த வருடத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் மீது 598 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் குறிப்பிட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision