பழைமை வாய்ந்த பூங்கா - பெயர் பலகை சேதம்

பழைமை வாய்ந்த பூங்கா - பெயர் பலகை சேதம்

திருச்சி டிராபிக் திருவேங்கடம் என்பவர் திருச்சி மாநகராட்சி நிர்வாகமனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் திருச்சி மாநகரம் தற்சமயம் புதுப்பொலிவு பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

இந்நிலையில் திருச்சி சிங்கார தோப்பு அருகில் உள்ளஇப்ராஹிம் பூங்கா மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இந்த பூங்கா பொழுது போக்கி வருகின்றனர். இயற்கை சூழலோடு அழகாக காட்சி அளிக்கும் இந்த பூங்காவின் நுழைவாயில் பெயர்ப்பலகை பெயர்ந்து உள்ளது. இதனை மாற்றி புதிதாக பெயர் பலகை அமைக்க வேண்டும்

என்று ஒரு வருடத்திற்கு முன்பு கேட்டிருந்தேன். ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் சில எழுத்துக்கள் விழுந்து விட்டன. இப்ராஹிம் பூங்கா என்ற பெயர் பலகை நவீன முறையில் வைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision