அதிகரிக்கும் ரயில் யானை மோதல்கள், யானைகள் அழிவு காடுகளின் அழிவிற்கு நிகர். சமூக ஆர்வலர் கோ.சுந்தர்ராஜன்

அதிகரிக்கும் ரயில் யானை மோதல்கள், யானைகள் அழிவு காடுகளின் அழிவிற்கு நிகர். சமூக ஆர்வலர் கோ.சுந்தர்ராஜன்

இன்றைக்கு உலகமே பெரும் தொற்றால் போராடிக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன்  பற்றாக்குறை ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பல. இவர்களின் மரணத்திற்கும், யானைகளின் மரணத்திற்கும் ஓர் நெருங்கிய தொடர்புண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் 186 யானைகள் இந்தியா முழுவதும் ரயில்கள் மோதி இறந்துள்ளனர் இவற்றின் இறப்பிற்கும் இன்றைய கால சூழலுக்கும் ஒரு தொடர்பு உண்டு. உருவத்தில் பெரியதாக இருந்தாலும், குணத்தில் ஒரு குழந்தையை போல் இருப்பது தான் யானையின் இயல்பு. யானையை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். யானைகள் காடுகளை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.

யானைகளின் எண்ணிக்கை பெருகினால் தான் காடுகள் வளரும், காடுகள் தான் மழை, ஆக்சிஜன் இரண்டிற்கும் மிக முக்கிய ஆதாரங்கள். பெரும்பாலான ரயில் யானை மோதல்கள் இரவில் தான் நடக்கின்றன. ரயில் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் அடர் வனப்பகுதிகள் தான். குறிப்பாக வளைவுகள் தூரத்தில் பார்வை தெரியாது. மேலும் இரவு நேரங்களில் வளைவுகளில் யானையின் கருப்பு நிற அருகில் வந்த பின்தான் கண்டுபிடிக்க முடிகிறது. யானைகள் விலங்குகளிலேயே அதிக ஞாபக சக்தி கொண்டது. அவை தங்களுடைய வாழ்விடங்கள் செல்ல ரயிர் பாதையை கடந்து ஆகவேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

1980 முதல் 2007 வரை 20 வருட காலகட்டத்தில் 150 யானைகள் 36 சதவீத விபத்துகள் அசாமிலும், 26 சதவீத விபத்துகள் மேற்குவங்கத்தில், 6 சதவீத விபத்துகள் தமிழ்நாட்டிலும் நடந்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகின்றது. யானைகளை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாக யாதெனில், அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளை கண்டறிய வேண்டும். வனத்துறை ஊழியர்களை தொடர்ந்து ரோந்தில் இருப்பதற்கு உத்தரவிடவேண்டும். ரயில்வே துறை வனத்துறை இணைந்து கமிட்டி அமைத்து தொடர் சந்திப்புகள் மற்றும் கடிதம் வாயிலாக யானைகள் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் மேம்படுத்துதல் வேண்டும்.

தண்டவாளத்திற்கு இருபுறமும் உள்ள செடிகளை வெட்டுதல். யானைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் ரயில் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைத்தல். தமிழ்நாட்டு வனப் பகுதிகளான கோவை வாளையார் மற்றும் கர்நாடகா செல்லும் வழித்தடமான ஒசூர் பகுதிகளில் அடிக்கடி ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து யானைகள் மட்டும் தான் ரயில் மோதி உயிரிழந்த இருக்கின்றது என்று தெரிவித்திருப்பது யானை ஆர்வலர்கள்  மத்தியில் பெரும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுகுறித்து சமூக ஆர்வலர் கோ.சுந்தரராஜன் கூறுகையில்... யானையை ஒரு வனவிலங்கு என்று  மட்டுமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் அவை தான் காடுகளின் ஆதாராம் என்பதை நாம் அறியாமல் இருப்பதே இத்தனை பிரச்சினைகளுக்கும் மிக முக்கிய காரணம். யானைகளின் அழிவு இயற்கையின் அழிவுக்கு வழிவகுக்கும். இயற்கையின் அழிவு  உலக மக்கள் அனைவரின் அழிவு நிச்சயம் என்பதே மறைமுக அர்த்தம். இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவுகளை நாம் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம் அப்படி இருந்தும் இயற்கையை  கையாளும் விதத்தில் நம்மிடம் எவ்வித மாற்றமுமில்லை. இன்னும் கூறப்போனால் இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமல்ல இங்கு இருக்கும் ஒவ்வொரு உயிரினங்களோடும் ஒவ்வொரு உயிரும் பிணைக்கப்பட்டுள்ளது. 


அந்த சுழற்சி முறையை மாற்றி அமைக்கும் போது பெரும் பாதிப்பு மனிதர்களுக்கு என்பதை மறந்தே மனிதர்களே அந்த மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது தான் நம் அழிவிற்கான முதல் காரணம். யானைகள் தானே என்று நாம் காட்டும் அலட்சியம்  இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் யானைகளே இல்லாத நிலை ஏற்படும் அப்படி ஆனால் இந்தியாவில் காடுகளின் வளம் குறையும் மக்களின் அழிவு  இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்கிறார்.

எதை விதைக்கிறோமோ அதுவே  நமக்கு கிடைக்கும் இயற்கையைப் பாதுகாத்தல் மனிதர்களை காப்பதற்கான ஒரே வழி. மக்கள் எப்போது இயற்கையோடு இணைந்த வாழ்வு தான் நம் வாழ்விற்கான சிறந்த வழி என்பதை உணர்கிறார்களோ அப்பொழுது இவ்வுலகம் அழகாய் மாறும் என்கிறார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK