திருச்சியில் பொது கழிப்பிடம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை -நடவடிக்கை எடுக்கப்படுமா?

Oct 24, 2023 - 16:43
Oct 24, 2023 - 23:12
 657
திருச்சியில் பொது கழிப்பிடம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை -நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்சி கே.கே.நகர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே பொது கழிப்பிடம் ஒன்று உள்ளது.இந்த கழிப்பிடத்திற்க்கு தண்ணீர் வசதி அருகில் இருந்து பூங்கா வில் உள்ள கிணற்று மூலமாக மோட்டார் வைத்து விநியோகிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை (19.10.2023) முதல் பூங்காவில் உள்ள மோட்டார் பழுதானதால் பொதுகழிப்பறை இடத்திற்கு தண்ணீர் வரவில்லை. தற்பொழுது கழிப்பிடமும் பூட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் கழிப்பிட இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால்  மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கனவே அப்பகுதிமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். உடனடியாக பொதுமக்கள், பயணிகள் பயன்படுத்தும் வகையில் தண்ணீர் வர கூடிய மோட்டார் சரி செய்து கழிப்பிடத்தை திறந்து விடவேண்டும்  என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision