சரஸ்வதி சன்னதியில் நெல்மணிகளில் குழந்தைகளுக்கு எழுத பயிற்றுவிப்பு

சரஸ்வதி சன்னதியில் நெல்மணிகளில் குழந்தைகளுக்கு எழுத பயிற்றுவிப்பு

விஜயதசமி விழாவை முன்னிட்டு திருச்சியில் உள்ள மும்மூர்த்திகள் ஸ்தலமான உத்தமர் கோவிலில் எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி சன்னதியில் நெல்மனிகளை கொட்டி எழுத பயிற்றுவித்த பெற்றோர்கள் ... சரஸ்வதி பூஜை தினத்தின் மறுநாள் தினமான விஜயதசமியில் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது - இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது.

கல்வியை, அறிவாற்றலை அருளும் தெய்வாமாக விளங்கும் சரஸ்வதிக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே சன்னதிகள் உள்ளது - அந்த வகையில் திருச்சி நம்பர்- ஒன் டோல்கேட் அருகே உள்ள மும்மூர்த்திகள் ஸ்தலமான உத்தமர் திருக் கோவிலில் எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி ஆலயத்தில் ஒவ்வொரு விஜயதசமியின் போதும் தங்களது குழந்தைகளை அழைத்து வந்து வித்யாரம்பம் என்று அழைக்கப்படும் கல்வி துவக்க நிகழ்ச்சியை நடத்தி பின்னர் பெற்றோர்கள் பள்ளியில் சேர்ப்பார்கள்.

அந்த வகையில் இன்று காலை முதலே உத்தமர் கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னதியின் முன்பாக நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் வருகை தந்து -  நெல்மணிகளில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான " அ" என்கிற எழுத்தை எழுத வைத்து வித்யாரம்பம் பயிற்று வித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision