நாய் தொல்லை புகார்கள் நம்பர் ஒன் - தீர்வு காண மாநகராட்சி திணறல்

நாய் தொல்லை புகார்கள் நம்பர் ஒன் - தீர்வு காண மாநகராட்சி திணறல்

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளிலும் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முதியோர் வரை பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். நாய்கள் விரட்டுவதால் ஆங்காங்கே விபத்துகள் நிகழ்வதும் தொடர்கதையாகிவிட்டது. 

இது தொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இந்தச் செய்தி அச்சேறும்போது நாய்த்தொல்லை பற்றி 200க்கும் மேற்பட்ட புகார்கள் மாநகராட்சிக்கு வந்திருப்பதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இந்தப் புகார்களில் வெறும் ஏழு புகார்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை மாநகராட்சி இணையதளத்திலிருந்தே அறிந்து கொள்ள முடிகிறது. குடிநீர், ஆக்கிரமிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைவிட நாய்த்தொல்லை பற்றிய புகார்களே அதிகம். 

இருப்பினும் மாநகராட்சி நிர்வாகம் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரும் விபரீதம் எதுவும் நிகழ்வதற்குள் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா? அல்லது நாய்களால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்ட பிறகுதான் விழித்துக்கொள்ளுமா என்பதே திருச்சி பொதுமக்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது. 

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க திருச்சி விஷன் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision