உய்யக்கொண்டானில் தண்ணீர் திறந்துவிடக் கோரி மனு
வாழைகளுக்கும்,குடிநீா் ஆதரத்திற்க்கும் உய்யகொண்டானில் உயிா் தண்ணீா் கேட்டு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் சங்கம் சாா்பாக பொது பணிதுறை ஆற்று பாசன கோட்டத்தில் உதவி செயற்பொறியாளா் அவா்களிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தின் முக்கிய பாசன கால்வாயான உய்யக்கொண்டான் பாசன கால்வாய் மூலம் ஏறத்தாழ 35,0000 ஏக்கா் பாசன வசதி பெற்றுவரும் நிலையில், தற்போது ஆயிரகணக்கான ஏக்கா்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழைகள்,உளுந்து,பருத்தி உள்ளிட்ட சாகுபடி பயிா்கள் தண்ணீா் இல்லாமல் கருகும் நிலைவயில்வுள்ளது. மேலும் அந்தநல்லூா் ஒன்றியம் பெட்டவாய்தலை துவங்கி ,மணிகன்டம் ஒன்றியம்,திருச்சி மாநகா்,திருவரம்பூா் ஒன்றியம் வாளவந்தான் கோட்டை வரை பல கிராம ஊராட்சிகளுக்கு குடிநீா் ஆதரமாகவும் ,பல ஆயிரகணக்கான பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் அத்யாவசிய தேவையை பூா்த்தி செய்யும் கால்வாயாக இருந்து வருகிறது.
தற்போது இக்கால்வாயில் தண்ணீா் வராமல் வறண்டு கிடப்பதால் இக்கால்வாயை ஒட்டிவுள்ள நூற்று கணக்கான கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து குடிநீா் தட்டுப்பாடு ஏற்ப்படும் நிலைவுள்ளதோடு,கருகும் வாழை,உளுந்து உள்ளிட்ட சாகுபடி பயிா்களை பாதுகாப்பதற்க்கும் மற்றும் ,பொது மக்களின் தேவைகளுக்கும், கால்நடைகளின் தேவைகளுக்கு உாிய தண்ணீா் வசதி இல்லாமல் பெரும் அல்லல் பட்டு வரும் சூழல் உள்ளது.
எனவே கருகும் நிலையில் உள்ள வாழை,உளுந்து,பருத்தி உள்ளிட்ட சாகுபடி பயிா்களை காப்பதற்க்கும்,நூற்று கணக்கான கிராமங்களின் குடி நீா் தேவைக்கும், பல ஆயிரகணக்கான பொதுமக்கள், கால் நடைகளின் அத்யாவசிய தேவைகளுக்கென உய்யக்கொண்டானில் தண்ணீா் விட உாிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision