உய்யகொண்டான் ஆற்றில் சிறுவர்கள் ஆபத்தான கொண்டாட்டம் - உயிர் பலி தடுக்கப்படுமா?
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உய்ய கொண்டான் ஆறும், அருகில் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. அந்த பகுதியில் உய்யகொண்டான் ஆற்றுப்பகுதியில் வருவதால் மிகப்பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. அங்கு உள்ள பாலத்தில் இருந்து வழியும் தண்ணீர் நீர்வீழ்ச்சி போல உள்ளதால் அந்தப் பகுதி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் வந்த குளித்து சந்தோசமாக நேரத்தை கழிக்கிறார்கள்.
இருந்தாலும் அந்த பாலத்தி்ல் அபாயகரமான பகுதி இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை அறிவிப்பு இருந்தும், அதைக் கண்டு கொள்ளாமல் சிறுவர்களும், இளைஞர்களும் குளித்து வருகின்றனர். இந்த தடுப்பணையில் குளித்த சிறுவர்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலக பின்புறம் உள்ள பகுதி வயல்வெளிகள் உய்ய கொண்டான் வாய்க்கால் இரண்டும் உள்ளதால் இப்பகுதியில் வரக்கூடிய இளைஞர்கள் விடுமுறை நாட்கள் மட்டும் இன்றி அனைத்து நாட்களும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இரவு நேரங்களில் வழிப்பறி செய்வது நடக்கிறத. இதனால் இப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தி கதவனை பகுதியில் யாரும் குளிக்காத வகையில் தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision