அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Oct 31, 2022 - 23:53
Nov 1, 2022 - 00:53
 469
அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மரம் வளர்ப்போம்  மழை பெறவோம் என்பதெல்லாம் வாசகங்களோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது போலும்  இன்றைய கால சூழலில் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு அதிக மரங்களை வளர்க்க வேண்டும் என்ற அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள அன்சா ரெசிடென்சியில் எவ்வித முன்ன அனுமதியும் இன்றி மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர ஆணையர் கூறுகையில், அனுமதி இன்றி மரம் வெட்டப்பட்டுள்ளது அதற்கான  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதே போன்று திருச்சி காஜாமலை EB காலணியில்  சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று சுமார் 28க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

மரங்கள் முழுவதுமாக வெட்டப்படவில்லை   கேமராக்கள் பொருத்தப்பபட வேண்டும் என்று கிளைகள் மட்டுமே வெட்டப்பட்டன. அதிலும் அனுமதி பெற்ற பின்னரே மரக்கிளைகள் வெட்டப்பட்டுள்ளது என்று EB காலனி சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இதுபோன்ற மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் வகையில் மாநகராட்சி உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLan