தேசிய நெடுஞ்சாலையில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் எரிப்பு - வாகன ஓட்டிகள் அவதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கன்பாலம் மற்றும் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலகம் அருகில் சாலையோரம் மர்ம நபர்களால் கொட்டப்பட்டிருந்த மூட்டை மூட்டைகளான குப்பைகளை மர்மநபர்கள் தீயிட்டுள்ளனர். தீயினால் ஏற்பட்ட புகை மண்டலம் நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகளுக்கு பெரும் அவுதியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எரிந்துக்கொண்டிருந்த குப்பை மூட்டைகளில் அதிக அளவிலான மருத்துவ கழிவுகளும் இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக குப்பை மூட்டைகள் எரிந்த நிலையில், தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை வீரர்கள் சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு அருகே தற்போது நூற்றுக்கணக்கான குப்பை மூட்டைகளை மருத்துவ கழிவுகளுடன் மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். தொடர்ந்து திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையோரம் திடீரென மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் உள்ளடங்கிய குப்பைகளை வீசி சென்றது யார்? குப்பைகள் எங்கிருந்து வந்தது? என விசாரணை மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO