காவல் நிலையம் முன்பு சிறை காவலர் தீக்குளிப்பு - எஸ்.ஐ பணியிடை நீக்கம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே செம்பரை ஊராட்சியில் வசிப்பவர் மணி இவரது மகன்கள் நிர்மல், ராஜா இருவரும் அண்ணன் தம்பி ஆவார்கள். ராஜா லால்குடி கிளை சிறையில் காவலராக பணியாற்றி வந்துள்ளார்.
இவரது தம்பி நிர்மலுக்கும் ராஜாவுக்கும் சொத்து பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த சொத்து பிரச்சனை தொடர்பாக அண்மையில் இருவருக்குள்ளும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் மீண்டும் ராஜாவுக்கும், நிர்மலுக்கு இடையே தகராறு ஏற்படவே ராஜா லால்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தார். புகாரை லால்குடி போலீசார் ஏற்க மறுத்ததால் விரக்தி அடைந்த சிறை காவலர் ராஜா காவல் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு தனக்குத்தானே உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
இதில் ராஜா 84 சதவீதம் தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த ராஜாவை லால்குடி போலீசார் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொற்சொழியன் முறையாக விசாரணை செய்யவில்லை என்று நேத்து தீக்குளித்த ராஜா புகார் தெரிவித்திருந்த நிலையில், திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர், எஸ்.ஐ பொற்செழியனை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn