சரியான பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் சிரமம்

சரியான பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்வதில் சிரமம்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த அதிகாரம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கருமன் மகன் சந்திரன் (60) உயிரிழந்தார். வலையப்பட்டி வடக்கிகலம் பகுதியில் இவரது குடியிருப்பு உள்ளது. இப்பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்கு உள்ள 150 குடும்பத்திற்கும் ஓடை பாதை மட்டுமே உள்ளது.

அதுவும் மழைக்காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை. வடக்கிகலம் பகுதியில் இரண்டு புளிய மரங்கள் உள்ளன. இரண்டு புளிய மரத்தில் ஒன்று தனியார் வசம் அனுபவத்தில் உள்ளது. மேலும் அந்த புளிய மரத்தின் அருகில் இருந்த ஓட்டு வீட்டின் மீது மழை காலங்களில் மரக் கிளைகள் முறிந்து விழுவதால் பயந்து கொண்டு வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்து உள்ளார். மேலும் எனக்கு இருப்பதோ இரண்டு சென்டு இடம் அதில் பாதைக்கு அனுமதிக்க முடியாது என மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று உயிரிழந்த சந்திரனின் உடலை அவரது உறவினர்கள் மயானத்திற்கு எடுத்துச் செல்ல சரியான பாதை வசதி இல்லாததால் புளிய மரத்தின் அருகே வரும் போது சுமார் 5 அடி பள்ளத்தில் இறங்கி மிகவும் சிரமப்பட்டு உறவினர்கள் இறுதி ஊர்வலத்தை நடத்தினர். அப்பகுதியில் பாதை அமைத்தால் வடக்கிகலம் பகுதியில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

மேலும் வலையபட்டி சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது எனவும், இப்பகுதி பொதுமக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் இப்பகுதிக்கு சாலை அமைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision