மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - திருச்சி மக்களின் கருத்து என்ன?

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - திருச்சி மக்களின் கருத்து என்ன?

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும்அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

ஷிஸ்மா ஷீலு

மாணவ பத்திரிக்கையாளர் :

உலக அரங்கில் கொரானா தொற்று பாதிப்பின் எண்ணிக்கைவீதம் மீண்டும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2020ல் ஏற்பட்ட தொற்றுப்பாதிப்பு நாளடைவில் குறைந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கடந்த இரண்டு மாதங்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது மீண்டும் தொற்று அதிகரிப்பதற்கான காரணங்களை பொதுமக்களிடம் தெரிந்துகொள்ள திருச்சி விஷன் குழு பொதுமக்களை அனுகியது.

 அதில் நமக்கு கிடைக்கப்பெற்ற பதில்கள் சிலவற்றை இங்கு பகிர்கிறோம். 

உதயகுமார்.

கல்லூரி மாணவர் 

மக்கள் சுகாதாரமாக இருந்தாலே பல்வேறு நோய்கள் ஏற்படாமல் இருக்கும் ஆனால் அசாதாரண சூழலில் கூட மக்கள் தங்களை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அலட்சியம் காட்டுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முக முக்கியமானது உடல் தூய்மையே அதனை சரியாக செய்தாலே தொற்றில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் உதயகுமார்.

 

பாலமுருகன்

ஆட்டோ ஓட்டுநர்  

மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக கவசம் அணிதல்,கிருமி நாசினி பயன்படுத்துதல், கைகளை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடித்து தொற்று அதிகரிப்பதை குறைக்கலாம் அதுமட்டுமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்வதை மக்கள் தங்களுடைய கடமையாக கருத வேண்டும்.

  மக்கள் அரசு கூறும் வழிமுறைகளை பின்பற்றினாலே அதிகரிப்பதை குறைக்கலாம் என்று கூறுகிறார் பாலமுருகன் .

மாரிஸ்வரி

 இல்லத்தரசி

மக்கள் கொரானாதொற்றின் பரவலை கவனம் கொள்ளாமல் அலட்சியப்படுத்தி கொண்டு பொது இடங்களுக்கு செல்லுதல், அரசு கூறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைககளை பின்பற்றாமல் இருத்தல் இத்தொற்று அதிகரிப்பதற்கான மிக முக்கிய காரணம் என்கிறார் மாரிஸ்வரி.

ஜானகி

 இல்லத்தரசி

நாம் பாரம்பரியமிக்க முறைகளை பயன்படுத்தினாலே பல்வேறு நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை கிருமிநாசினியாக பயன்படுத்தலாம் ஆனால் ஆடம்பர வாழ்க்கையில் இவையெல்லாம் பயண்படுத்தாமல் இருப்பதே இதுபோன்ற நோய்கள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் என்று கூறுகிறார் ஜானகி.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu