சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதையில் விழுந்த மரம்
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கான பாதையில் பத்து நாட்களுக்கு முன்பு மரம் விழுந்த நிலையில் இன்றுவரை அந்த மரம் அகற்றபடாத நிலையில் அங்கு உள்ள சுடுகாட்டை செல்வதற்கான பாதை மூடப்பட்டுள்ளது.
இதனை அகற்றவேண்டும் என ஊர் பொதுமக்களும், சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் திருப்பராய்துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தங்கராஜ் கூறுகையில்...... 50 வருடங்களாக இங்கிருக்கும் அனைத்து மக்களுக்கும் சொந்தமான சமத்துவ சுடுகாட்டிற்கு செல்வதற்கு இருக்கும் ஒரே வழியில் விழுந்துள்ள இந்த மரம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது.
அதனால் மரம் விழுந்தவுடன் கோயில் நிர்வாகத்திடம் மரத்தை அகற்ற வேண்டும் என ஊர் பொதுமக்கள் பட்டயதார்களிடம் தகவல் தெரிவித்து விட்டனர். கோவில் நிர்வாகம் இன்றுவரை மரத்தை அகற்றாத நிலையில், ஊராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளனர். அதனடிப்படையில் அறநிலையத்துறை அனுமதி வழங்கினால் ஊராட்சி நிர்வாகம் மரத்தை வெட்டி தருவதற்கு தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அறநிலை துறை இந்த மரத்தை வெட்டி பாதையை சரி செய்து தர வேண்டும் அல்லது மரத்தை வெட்டி பாதையை சரி செய்வதற்கு ஊராட்சி நிர்வாகத்திற்கு அனுமதி வழங்க வேண்டுமென மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision