அடிக்கடி விபத்து பயத்துடன் சாலையை கடக்கும் பொதுமக்கள் தீர்வு எப்போது

அடிக்கடி விபத்து பயத்துடன் சாலையை கடக்கும் பொதுமக்கள் தீர்வு எப்போது

திருச்சி தெப்பக்குளம் அருகே லூர்து அன்னை தேவாலயத்திற்கு முன்பாக பொதுமக்கள் பாதசாரிகள் சாலை கிடப்பதற்கு பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.குறிப்பாக அப்பகுதியில் உள்ள கடைகள் வாகனங்கள் பாதசாரிகள் சாலை கடப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர். 

இப்பகுதியில் இரண்டு கல்லூரிகள், பள்ளிகள் உள்ளது. மிக முக்கியமாக கடைவீதிக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இச்சாலையை கடக்க வேண்டி உள்ளது. மேலும் தேவாலயம் அருகே பேருந்து நிறுத்தமும் உள்ளது. தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக் கொண்டு சாலையை மறித்து பயணிகளை இறக்கி விடுவதும் ஏற்றி செல்வதுமாக உள்ளது.

ஒரு பக்கம்  பேருந்துகள் சாலை வழிமறித்து நிற்பதும் ,ஆக்கிரமிப்பு கடைகள் மறுபுறம் இதனால் பொதுமக்கள் சாலை கடப்பது எப்படி என திகைத்து நிற்கின்றனர். இந்நிலையில் இன்று தனியார் பேருந்து ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

பண்டிகை காலங்கள் வர இருப்பதால் உடனடியாக காவல்துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களும் பாதசாரிகளும் சாலையை எளிதாக கடக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு விபத்தை தவிர்க்க வேண்டும் என சாலையை கடக்கும் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO