டிஜிட்டல் பரிவர்த்தனை மறுக்கும் மருத்துவமனைகள் - மன உளச்சலில் மக்கள் நடவடிக்கை பாயுமா?

டிஜிட்டல் பரிவர்த்தனை மறுக்கும் மருத்துவமனைகள் - மன உளச்சலில் மக்கள் நடவடிக்கை பாயுமா?

இந்தியா முழுவதும் தற்பொழுது அனைத்து பண பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜிபே என பலதரப்பட்ட வகையில் பணத்தை செலுத்தலாம். பெட்ரோல் நிலையங்களில் ஜிபே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அதற்கான மெஷின் யு பி ஐ ஸ்கேன் கோடு அனைத்து வசதிகளும் உள்ளது.

சிறு டீக்கடையிலிருந்து மளிகை கடை பெரிய மால் வரை அனைத்திலும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி உள்ளது. ஆனால் பொது மக்களுக்கு மிக முக்கியமான தேவையான மருத்துவ வசதியில் சில மருத்துவமனைகள் அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளிடமும் அவர்களது உறவினர்களிடமும் நேரடியாக பணத்தை மட்டுமே கட்ட முடியும் என கரராக கட்டளையிடுகின்றன.

மிக முக்கியமாக தில்லைநகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது மனைவி அவசர மருத்துவ சிகிச்சைக்கு சென்ற பொழுது அவரிடம் ஜிபி மூலமாகவும், காடு மூலமாகவும் பணம் செலுத்தும் செலுத்த முடியும் நிலையில் இருந்தால் ஆனால் ரொக்கமாக நீங்கள் கொடுத்தால் தான் வாங்குவோம் என மருத்துவமனை நிர்வாகம் அவரை பதட்டத்தில் ஆழ்த்தியது நண்பர்களிடம் மற்றவர்களிடம் கேட்டு கடன் பெற்று பணத்தை மருத்துவமனையில் செலுத்தி உள்ளார்.

மற்றொரு நபர் தோல் நோய் சிகிச்சை பெரும் பிரபல மருத்துவரின் கிளினிக்-கில் இதே நடைமுறைதான் உள்ளது தான் மருத்துவ சிகிச்சைக்கு சென்ற பொழுது எந்த டிஜிட்டல் முறையிலும் பணத்தை செலுத்த முடியாது ரொக்கமாக மட்டுமே செலுத்த முடியும் செலுத்தினால் சிகிச்சை தரப்படும் எனவும், மருந்துகள் தரப்படும் எனவும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். பெரிய மருத்துவமனைகளில் அதிநவீன அறுவை சிகிச்சைகளுக்கே லோன் மூலம் கடன் பெரும் வசதியை மருத்துவமனைக்கு கொண்டு வந்து தருகிறார்கள்.

ஆனால் இது போன்ற சிறிய மருத்துவமனைகளில் சிறு மருத்துவ சிகிச்சைக்கு ரொக்க பணம்தான் கொடுத்தாக வேண்டும் என்று குறிப்பிடுவது என்ன நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் மத்திய அரசு டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்தி அனைவரும் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யும் பொழுது அவசர உயிர் காக்கும் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளிடம் சில மருத்துவமனையில் இப்படி நடந்து கொள்கின்றன.

இதற்கு உடனடியாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் எழுந்துள்ளது. இதே போல் பொதுமக்களுக்கு தங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகள் மருத்துவமனை குறித்து விவரங்களை எங்களுக்கு வாட்ஸ் அப் எண்ணில் தெரிவியுங்கள். இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க பயனுள்ளதாக இருக்கும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision