இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

இருசக்கர வாகனத்தை திருடிய இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

கடந்த (19.05.24)-ந் தேதி, காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தஞ்சாவூர்ரோடு தாராநல்லூர் பூக்கொல்லை தெருவில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரியும் ஒருவர் தனது வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை இரவு நிறுத்திவிட்டு மறுநாள் காலை பார்த்தபோது காணவில்லை என புகார் பெறப்பட்டது.

இந்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில், ஜெயில்பேட்டையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வினோத்குமார் (எ) ஆந்தை (23) த.பெ.விஜய் மற்றும் வரகனேரி பகுதியை சேர்ந்த இம்ரான்கான் (எ) பூரான் (20) த.பெ.சாகுல்ஹமீது ஆகியோர்கள் இக்குற்ற செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்து, எதிரிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் விசாரணையில், ரவுடி வினோத்குமார் (எ) ஆந்தை என்பவர் மீது காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லையில் 2 வழிப்பறி வழக்குகளும், தில்லைநகர் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், ஒரு அடிதடி வழக்கு, பொன்மலை காவல்நிலையத்தில் வழிப்பறி செய்ததாக ஒரு வழக்கு, போதை மாத்திரை விற்பனை செய்ததாக ஒரு வழக்கு மற்றும் அடிதடியில் ஈடுபட்டதாக ஒரு வழக்கு, பாலக்கரை காவல்நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் என மொத்தம் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் மற்றொரு எதிரியான இம்ரான்கான் (எ) பூரான் என்பவர் மீது காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லையில் வீடு புகுந்து திருடியதாக 2 வழக்குகளும், 2 வழிப்பறி வழக்கு, 1 திருட்டு வழக்கு, கஞ்சா விற்பனை செய்ததாக ஒரு வழக்கு, அரியமங்கலம் காவல்நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு என 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, ரவுடி வினோத்குமார் (எ) ஆந்தை மற்றும் எதிரி இம்ரான்கான் (எ) பூரான் ஆகியோர்களின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு காந்தி மார்க்கெட் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்று ஆயுதங்களை காண்பித்து குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision