பட்ட படிப்பை முடிக்க புரொபஷனல் இங்லீஷ் கோர்ஸ் ரத்து - திருச்சி சிவா எம்.பி பேட்டி

பட்ட படிப்பை முடிக்க புரொபஷனல் இங்லீஷ் கோர்ஸ் ரத்து - திருச்சி சிவா எம்.பி பேட்டி

திருச்சி காஜா மலை பெரியார் ஈ.வெ.ரா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள ஈ.வெ.ரா சிலைக்கு திமுக மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆட்சியாளர்களால், புரொபஷனல் இங்லீஷ் கோர்ஸ் கட்டாயமாக்கப்பட்டு, அதில் தேர்வாகி வந்தால் மட்டுமே பட்ட படிப்பை முடிக்க முடியும், என்ற நிர்ப்பந்தம் இருந்தது.

மேலும் அந்த வகுப்பில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் அல்லாத மற்ற ஆசிரியர்களும் பாடம் நடக்கு வந்தனர். இது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இது குறித்து, மத்திய அரசிடம் வலியுறுத்தியதால், பல்கலைக்கழக மாநியக்குழு இது குறித்து விசாரித்தது தற்போது புரொபஷனல் கோர்ஸ் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த சுமை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. லால்குடி மாந்துறை பகுதியில் உள்ள முதலாம் உலக போரில் உயிர்நீத்த தியாகிகள் போர் நினைவு சின்னத்தை “பச்சம்பேட்டை வளைவு” பராமரிக்க வேண்டும், என்று தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதி இருந்தேன். தற்போது அதனை புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn