ஸ்ரீரங்கம் - திருவானைக்காவல் சாலை 3வது முறையாக திடீர் பள்ளம் - மேயர் ஆய்வு

ஸ்ரீரங்கம் - திருவானைக்காவல்  சாலை 3வது முறையாக திடீர் பள்ளம் - மேயர் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதியில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி சாலையில், நேற்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனை மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி பொறியாளர்களுடன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் மேம்பாலம் தொடங்கும் இடம் அருகே நேற்று காலை திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி இளநிலை பொறியாளர் மற்றும் பணியாளர்கள் சென்று, அந்தப் பகுதியில் தடுப்பு அமைத்து பள்ளத் தைப் பார்வையிட்டு, சீரமைப்புப் பணிகள் உடனே தொடங்கி நடைபெற்று வருகின்றன.

காந்தி சாலையின் கீழே செல்லும் பழைய புதைசாக்கடை குழாய் பழுதடைந்து காரணத்தினால் அதில் உடைப்பு ஏற்பட்டு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதனைப் போற்கால அடிப்படையில் மாநகராட்சி பொறியாளர்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருவதை மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் மண்டலத் தலைவர், மாமன்ற உறுப்பினருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதைக் கழிவுநீர் நீரூற்று குழாய் ஆனது ஸ்ரீரங்கம் நகராட்சியாக இருந்தபோது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பதிக்கப்பட்டது. இக்குழாய் சேதமடைந்து அவ்வப்போது உடைப்பு ஏற்படுகிறது. இந்த புதை சாக்கடை குழாயில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் மண் அரிப்பு ஏற்பட்டு. சாலையில் பள்ளம் உருவாகிறது.

இந்நிலையில், அடிக்கடி திடீர் பள்ளங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், சாலையின் கீழே உள்ள புதை சாக்கடை குழாய்களை முழுமையாக மாற்றி புதிதாக அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்ய வேண்டும் என மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வில் மண்டல தலைவர் ஆண்டாள் ராம்குமார், செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி ஆணையர் ஜெயபாரதி, உதவி செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision