டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க கிணறுகளில் மீன்குஞ்சுகளை விடும் பணி

டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்க கிணறுகளில் மீன்குஞ்சுகளை விடும் பணி

திருச்சி மாநகராட்சி 61-வது வார்டுக்கு உட்பட்ட கமலா நேரு நகரில் சிறுமி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனையொட்டி மாநகரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிக்கும் வகையில் அங்கு உள்ள நல்ல தண்ணீர் கிணறுகளில் கம்பூசியா மீன்குஞ்சுகளை விடும் பணிகள் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் பரசுராம் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிணறுகளில் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகளை விட்டனர். இந்த வகை மீன் குஞ்சுகள் டெங்கு கொசு முட்டைகளை உட்கொண்டு டெங்கு கொசு உற்பத்தி ஆகாமல் தடுத்துவிடும். மேலும் அந்தப் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணியிலும், அபேட் மருந்து தெளிக்கும் பணியிலும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn