சீட்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

சீட்டு மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் சீல்நாயக்கன்பட்டியை சேர்ந்த செந்தில்கணேசன் என்பவர் தனது நண்பர்கள் தேக்கமலை மற்றும் தீனதாயாளன் ஆகியோருடன் இணைந்து சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி பல வாடிக்கையாளர்களுக்கு உரிய பணப்பட்டுவாடா செய்யாமல் இருந்து வந்த நிலையில், நிறுவன உரிமையாளர்கள் தலைமறைவாகினர்.

அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பான விசாரணையை திருச்சி பொருளாதாரா குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற டி.எஸ்.பி ஜனனிபிரியா, ஒரு மாத காலத்திற்குள் வழக்குகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்ததால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn