கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கம், வெஸ்ட்ரியன்ஸ் ரோலிங் டிராபிக்கான 15வது மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று திருச்சியில் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ஸ்ரீ பி.வேல்முருகன் - மண்டல முதுநிலை மேலாளர் - SDAT ரெவ். DR. வி.ராஜாமன்சிங், செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி சிபிஎஸ்இ பள்ளியின் தாளாளர், ஸ்ரீ.பி.விக்னேஷ்வரன், எஸ்.கே. ஜெயந்தி துணைத் தலைவர்கள் போட்டியை துவக்கி வைத்தார்கள்.

பள்ளி தலைமையாசிரியர் ஏ.சைமன் சுகுமார் வரவேற்றார். திருச்சி மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஆர்.கருணாகரன் நன்றி கூறினார் . இன்று (02.02.2024) லீக் போட்டிகள் நடைபெற்றன. நாளை (03.02.2024) நடைபெருகின்ற சூப்பர் லீக் போட்டிகளுக்கு பின்வரும் பள்ளிகள் தகுதி பெற்றுள்ளன. ஆண்கள் 1) சாண்டா மரியா மேல்நிலைப்பள்ளி, கே.கே.நகர்,  2) அரசு உயர்நிலைப்பள்ளி, 3) ராஜாஜி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி,  4) . SBIOA சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளி.  பெண்கள் 1) SBIOA சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி, 2) காவேரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, 3)ராஜாஜி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி, 4) சாந்தா மரியா மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் தேர்வாகியுள்ளன.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision