அனுமதி மறுப்பு - சாலையின் நடுவில் காத்திருந்த விநாயகர் சிலை - போலீஸ் குவிப்பு

அனுமதி மறுப்பு - சாலையின் நடுவில் காத்திருந்த விநாயகர் சிலை - போலீஸ் குவிப்பு

விநாயகர் சதுர்த்தி விழா நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்றாம் நாள் நீர் நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவதற்கு காவல் துறையில் அனுமதி பெற வேண்டும்.

இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒவ்வொரு மாவட்டத்திலும், விநாயகர் சிலை வைக்கும் கமிட்டியை அழைத்து ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை விநாயகர் சிலை வைப்பதற்கு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பொது இடத்தில் வைத்து வழிபடுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவிலில் மிகப்பெரிய அளவில் விநாயகர் சிலையை வைப்பதற்கு விழா கமிட்டியினர் முடிவு செய்தனர். இதற்காக 14 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை அமைக்கப்பட்டு தீரன் நகரில் இருந்து ஊர்வலமாக எடுத்திருந்தனர்.

இதை அறிந்த காவல்துறையினர் விநாயகர் சிலையை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுத்தனர். குறிப்பாக விநாயகர் சிலைகள் 10 அடிக்குள் இருக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சிலையின் அளவு அதிகமாக உள்ளதாக காவல்துறை அனுமதி மறுத்தனர். இதனால் சாலையில் நடுவில் விநாயகர் சிலை நிறுத்தப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதனால் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விநாயகர் சிலை கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட செய்தி அறிந்த இந்த அமைப்பினர் மற்றும் பாஜகவினர் அங்கு வாரத் தொடங்கினர். பின்னர் காவல்துறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதிமன்றம் உத்தரவை மீறக்கூடாது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

அதனை தொடர்ந்து விநாயகர் சிலையின் மீது இருந்த கிரீடம் கழட்டப்பட்டு அளவு குறைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து விநாயகர் சிலை சாலை மார்க்கமாக ஊர்வலமாக பீமநகர் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision