கோரையாற்றை ஆக்கிரமித்து வைத்துள்ள திருச்சி அமைச்சர் - தமிழக விவசாயிகள் சங்க தலைவர் குற்றச்சாட்டு.

கோரையாற்றை ஆக்கிரமித்து வைத்துள்ள திருச்சி அமைச்சர் - தமிழக விவசாயிகள் சங்க தலைவர் குற்றச்சாட்டு.

திருச்சி மாநகராட்சியுடன் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை மற்றும் லால்குடி சட்டப்பேரவைக்கு உட்பட்ட மாதவபெருமாள் கோவில், பிச்சாண்டவர் கோயில், தாளக்குடி, நாகமங்கலம் உள்ளிட்ட 27 ஊராட்சிகளை தமிழ்நாடு அரசு திருச்சி மாநகராட்சி உடன் இணைக்க உள்ளது. இதனை கண்டித்து ஏற்கனவே ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை, லால்குடி சட்டப்பேரவை பகுதியை சேர்ந்த பல்வேறு கிராமத்தின் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் தங்களது மனுவை வழங்கி உள்ளனர். 

இந்நிலையில் 27 ஊராட்சிகளை இணைக்கும் வகையில் அறிவிப்பாணையை விரைவில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை மற்றும் நிர்வாகி ஆகியோர் ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதை கண்டித்து தொடர் தண்ணீர் அருந்தா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து செய்தியளர்களுக்கு ம.ப.சின்னதுரை அளித்த பேட்டியில்...... கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மாநகராட்சியுடன் திருவரம்பூர் மற்றும் லால்குடி சட்டப்பேரவைக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை இணைப்பதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே பல்வேறு பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பொழுதும் அந்தப் பகுதிகளில் எந்தவிதமான வளர்ச்சியோ, முன்னேற்றமோ, ஆக்கிரமிப்பு அகற்றமோ இதுவரை மாநகராட்சிகள் அகற்றப்படவில்லை.

மாவட்ட ஆட்சியரிடத்தில் பலமுறை மனு கொடுத்தும் அவைகளை மிச்சர் மடிப்பதற்காக போட்டு வருகின்றனர். அழைத்து எந்தவிதமான பேச்சுகள் நடத்தவில்லை ஆய்வு மேற்கொள்ளவில்லை. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் இந்த ஊரை சேர்ந்தவர் அவருக்காக மாநகராட்சியாக மாற்றத்திட்டம் விட்டு வருகின்றனர்.

அவருக்கு எங்கெல்லாம் சொத்து இருக்கிறதோ அங்கெல்லாம் வளர்ச்சித் திட்டம் சிறப்பாக உள்ளது. அவரது ஊரில் உள்ள நந்தியாற்றில் 10 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டி 152 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளார். அரியார், கோரையாற்றில் ஆக்கிரமிப்பு அகற்றவில்லை. கோரையாற்றை அவர் ஆக்கிரமித்துள்ளார். 

அப்பகுதியில் 200 ஏக்கர் உள்ளதால் தான் அப்பகுதியில் புதிய பேருந்து நிலையத்தை கொண்டு வந்துள்ளார் இது அக்கிரமமான செயல். அடிமை மாதிரி மக்களை பயன்படுத்தி வருகின்றனர். மக்களுடைய கருத்தை பிரதிபலிக்கும் வகையில் 2026ல் இவர்களை வீட்டுக்கு அனுப்புவார்கள் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision