திருச்சி மாநகராட்சியில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் முதலிடம் பெற்ற கோட்டம்

திருச்சி மாநகராட்சியில் கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கையில் முதலிடம் பெற்ற கோட்டம்

கோவிட் தொற்று இரண்டாவது அலை கடந்த 3 மாதமாக வெகுவேகமாகப் பரவி வந்தது. திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 1777பேர் வரை ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். பிறகு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 242 வரை கொண்டு வரப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மாநகர கிராமப்புறம் என போட்டி நிலவி வந்த சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியர் சிவராசு எடுத்த நடவடிக்கைகள் தற்போது கோவிட் தொற்று எண்ணிக்கை நேற்று 242 பேர் என குறைந்துள்ளது.

திருச்சி மாநகரில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் நான்கு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.அந்த நான்கு கோட்டங்களில் தொடர்ந்து முன்னிலையில் அதிக தொற்றுவுடன் இருப்பது கோஅபிஷேகபுரம் கோட்டம் முதலில் இடத்தில் உள்ளது.  இரண்டாம் இடத்தில் 9231 பேரும் மூன்றாம்  இடத்தில் 6542 பேருடன் ஸ்ரீரங்கமும் நான்காம் இடத்தில் 5929 பேருடன் அரியமங்கலம் கோட்டம் இதுவரை தொற்று பாதிக்கபட்டவர்கள். கோஅபிஷேகபுரம் கோட்டம் தான் அதிகமானோர் கோவிட்  தொற்றால் 11561பேர்இதுவரை  பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

மாநகராட்சியிலுள்ள 4 கோட்டங்களில் அதிகபட்சமாக இதுவரை 146 பேர் கோஅபிஷேகபுரம் கோட்டத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். தொற்று தற்போது குறைந்து வரும் நிலையிலும் இக்கோட்டம் தான் இன்னும் குறைவான எண்ணிக்கையிலும் முதலிடமாகவே உள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF