இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு.

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் டிரைவர் உயிரிழப்பு.

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பண்ணப்பட்டி தெற்கு அமைய புரத்தைச் சேர்ந்தவர் மூக்கன் மகன் ரவிச்சந்திரன் ( 27 ). இவர் டிரைவர் வேலை பார்த்து வந்த நிலையில், மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே  உள்ள அமையபுரம் கிராமம்  கணக்கப்பிள்ளைகள் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே கரூரிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இவரது இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ரவிச்சந்திரனின் உடலைக் கைப்பற்றினர்.

பின்னர்உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision