மேற்கு வங்க அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பாஜகவினர் மெளன ஊர்வலம்.

மேற்கு வங்க அரசை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பாஜகவினர் மெளன ஊர்வலம்.

மேற்கு வங்க பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்ததை கண்டித்தும், நீதி கேட்டும், பாதுகாக்க தவறிய மேற்கு வங்க அரசை கண்டித்து திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாரதிய ஜனதா கட்சி திருச்சிபுறநகர் மாவட்ட சார்பில் மாநில பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீகாந்த் தலைமையில்,

மாநில மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தனலட்சுமி, மகளிர் அணி மாவட்ட தலைவி கௌரி ஆனந்தன், மாவட்டத் துணைத் தலைவர் லலிதா அழகப்பன், நகர தலைவி சாந்தி முத்துகிருஷ்ணன் மல்லிகா ஆகியோர் முன்னிலையில்

கோவில்பட்டி சாலை காமராஜர் சிலையில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி மெளன ஊர்வலமாக புறப்பட்டு மணப்பாறை பேருந்து நிலையம் வரை மழையில் நனைந்தபடியே அருள்மிகு ஸ்ரீ முனியப்பன் திருக்கோவில் வரை மெழுகுவர்த்தி ஏந்தியபடி  மௌன ஊர்வலம் நடைபெற்றது. 

இதில் மணப்பாறை நகர தலைவர் கோல்டு கோபாலகிருஷ்ணன், ஓ பி சி அணி மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், நகர பொதுச்செயலாளர் சுரேஷ், நகர ஓபிசி அணி தலைவர் பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision