கொடுக்கல் வாங்கல் பிரச்சினை - கடை உரிமையாளரின் தலையில் தீ
திருச்சி காந்தி மார்கெட் ஜெயில் பேட்டை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான கடையை ரங்கராஜ் என்பவர் ராஜா என்பவருக்கு உள் வாடகைக்கு கொடுத்துள்ளார். இதற்காக ரூ. 2 லட்சம் ரங்கராஜன் பெற்றுள்ள நிலையில், மேலும் வாடகைதாரர் ராஜாவிடம் 5 லட்சம் 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடையை காலி செய்ய சொல்லி ரங்கராஜ் கூறிய உள்ளார். அதற்கு சகோதரர்கள் வாங்கிய முழு தொகையும் ராஜா கேட்டுள்ளார். ஆனால் ரங்கராஜ் ஒரு லட்சம் மட்டுமே தருவதாக கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த ரங்கராஜ் கையில் வைத்திருந்த கத்தியால் ராஜாவை குத்தியதாக கூறப்பட்டது. மேலும் ரெங்கராஜ் பெட்ரோல் எடுத்து ராஜா மீது ஊற்றி தீ வைக்க முயன்ற பொழுது ரங்கராஜ் பின்னாளிலிருந்த ஒருவர் அவரை தடுத்து சட்டையைப் பிடித்து இழுத்தார்.
இதில் எதிர்பாராத விதமாக ரங்கராஜ் உடலில் பெட்ரோல் கொட்டியதோடு இடது கையில் இருந்த அவரது லைட்டரும் அழுத்தியதில் தீ பற்றிக் கொண்டது. உடனே அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து ரங்கராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதே போன்று கையில் காயமடைந்த ராஜாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO