எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரியின் 15வது ஆண்டில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரியின் 15வது ஆண்டில் முதலாம் ஆண்டு தொடக்க விழா

எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி. பொறியியல் கல்லூரியின் 15வது ஆண்டில் முதலாம் ஆண்டு தொடக்க விழா (12.09.2024) அன்று எஸ்.ஆர்.எம். திருச்சி வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பின்னர் மேடையில் வீற்றிருந்த சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர், மாணவர்கள் இணைந்து குத்துவிளக்கு ஏற்றினர்.

நிகழ்வில் வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று எஸ்.ஆர்.எம்.டி.ஆர்.பி பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். திருச்சி மற்றும் ராமாபுரம் எஸ்.ஆர்.எம். கல்விக் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஆர்.சிவக்குமார் தலைமையுரை வழங்கினார். இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தின் தலைமை இயக்குநர், முனைவர். நா.சேதுராமன், சென்னை ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தில் இயக்குநர், முனைவர் க.கதிரவன் வாழ்த்துரை வழங்கினர்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னை ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளரும், இயக்குநருமாகிய ராஜலட்சுமி சீனிவாசன் வருகை பிரிந்து சிறப்புரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில்.... மாணவர்கள், தற்போதைய தொழில்துறையின் தொழில்நுட்ப போக்குகள் குறித்தும் அவற்றை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் கூறினார். முன்னுதாரணமே மாற்றத்தின் படி என்று கூறியதுடன் தரவு மாற்றம், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் நிலையான பசுமை சக்தியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களிடம் வலியுறுத்தினார்.

மேலும் மாணவர்கள் கோடைகால பயிற்சித் திட்டங்கள், வாசிப்பு திறன் வளர்ச்சி, கலை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் திறன் செயல்பாடுகளில் அங்கீகரிக்க வேண்டும் என்றும் கூறினார். நிகழவிற்கு மற்றும் ஒரு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த பெங்களூரு மேத்வொர்க்ஸ் கல்வி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் சந்தன் பிரமானிக் சிறப்புரை வழங்கினார். 

நல்ல ஆரோக்கியம், தொழில் வளர்ச்சியை அதிகரிக்க நண்பர்களின் தேர்வு சரியானதாக அமைய வேண்டும் என்றும் தொழில் வாழ்க்கையில் செழிக்க ஆர்வமுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். மேலும், மாணவர்கள் தனது இலக்கில் முழு வெற்றி அடைய தொடர்ந்து பயிற்சி செய்து சாதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக எஸ்.ஆர்.எம். டி.ஆர்.பி., பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் நன்றியுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து விழா நிறைவாக தேசிய கீதம் பாடப்பட்டது. நிகழ்வில் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த தொடக்க நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்றிருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision