குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளியமுறையில் டான்ஸ் - திருச்சியின் The Nameless Dance ஸ்டூடியோ!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளியமுறையில் டான்ஸ் - திருச்சியின் The Nameless Dance  ஸ்டூடியோ!!

கடந்த 20 வருடங்களாக 15 ஸ்டைல்களில் நடனமாடி கொண்டிருப்பவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்த டான்ஸ் சுரேஷ் என்ற சுரேஷ் மோகன். விஜய் டிவி, ராஜ் டிவி போன்ற தொலைக்காட்சி சேனல்களின் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றவர். பல வருடங்களாக பலருக்கும் நடனத்தை எளிதான முறையில் கொண்டு சேர்த்து வருகிறார். 

தற்போது கே.கே.நகரில் 2000 சதுரடியில் பிரமாண்டமான டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றை நிறுவியுள்ளார். இதில் குழந்தைகளை ஸ்டூடியோவில் இருந்தே கவனிக்கும் வண்ணம் பெற்றோருக்கு Zoom Access, போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதற்கான அனைத்து விதமான சுவர் மற்றும் ஸ்டூடியோ அமைப்பு, 10 பேருக்கு மேல் ஒரே பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இலவச வாகன வசதி மற்றும் சிறப்பு குழந்தைகள் மற்றும் அரசு பள்ளி குழந்தைகளுக்கு கட்டண சலுகை என பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

The Nameless Dance Studio என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் ஸ்டூடியோ பற்றி டான்ஸ் சுரேஷ் பேசுகையில்..... பள்ளி காலத்தில் இருந்தே எனக்கு நடனத்தின் மீது பெரும் ஆர்வம். ஆனா அப்போல்லாம் மேடை பயம் அதிகம், கல்லூரி காலங்கள் தான் என்னோட நடனத்திற்கு தீனி போடப்பட்டது.

கொஞ்சம் கொஞ்சமா மேடை பயம் விலகி நடனமாட ஆரம்பிச்சேன், தொடர்ந்து டிவி ஷோகளில் கலந்து கொள்ளவும், என்னோட திறமையை மெருக்கேத்தவும் கல்லூரி காலங்கள் ரொம்ப உதவியா இருந்துச்சு.

அங்க இருந்து தொடங்குன என்னோட நடன பயணம் இப்போ இங்க வந்து நிறுத்திருக்கு. மற்ற கலைகளை கத்துக்குறேனு சொல்லும்போது ஒத்துக்குற பெற்றோர்கள் நடனத்தை ஒருபடி கீழ தான் பாக்குறாங்க, அத மாத்த தான் இந்த டான்ஸ் ஸ்டூடியோ ஆரம்பிச்சிருக்கேன். பெற்றோர்கள் வந்து பாத்தா கண்டிப்பா தன்னோட பிள்ளைகளை அனுப்பனும் அதுக்கு தான் ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணிருக்கேன்.

டான்ஸ் அப்படிங்கிற மனசை புத்துணர்ச்சி ஆக்குற, எல்லாரையும் சந்தோசமா மாத்துற கலை வேற ஏதும் இல்ல அதுனால அத முடிஞ்ச அளவு எல்லார்கிட்டயும் கொண்டு போய் சேர்க்கணுங்கிறது தான் என்னோட எண்ணம் என நெகிழ்கிறார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision