ஆர்டிஓ வாடகை பாக்கி - காரை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தவரால் பரபரப்பு

ஆர்டிஓ வாடகை பாக்கி - காரை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்தவரால் பரபரப்பு

திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். கார் ஓட்டுநரான இவர், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு தனது காரை லால்குடி தேர்தல் அதிகாரிக்கு வாடகைக்கு ஓட்டியுள்ளார். இதற்காக வாடகையாக 15 ஆயிரம் ரூபாய் பெறாமல் இன்று வரை காத்திருக்கிறார்.

வாடகை பணத்தை கேட்டு சண்முகம் பல முறை லால்குடி ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். ஆனால் பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த அவர் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் காரை ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். நுழைவாயில் காவல்துறையினர் அவர் செல்ல அனுமதி மறுத்ததால் தனது காரை நிறுத்தினர்.

இது குறித்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் சண்முகம் கூறுகையில்.. எனக்கு வாடகை பாக்கி 15 ஆயிரம் ரூபாய் உள்ளது. வாடகையை ஆர்டிஓ தராமல் இழுத்தடிப்பு செய்து வருகிறார். எனது காரை அரசே எடுத்துக்கொள்ளட்டும்,  நான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நிலையில், மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளேன்.

மேலும் என்மீது காவல்நிலையத்தில் வழக்கு கொடுத்து சிறைக்கு அனுப்பி விடுவேன் என்று RDO மிரட்டுகிறார். எனவே மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து எனது வாடகை பாக்கி பணத்தை பெற்றுத்தரவேண்டும் என்று தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn