என்ஐடி மாணவிக்கு லேப்டாப் வழங்கிய பெரம்பலூர் எம்.பி

என்ஐடி மாணவிக்கு லேப்டாப் வழங்கிய பெரம்பலூர் எம்.பி

60 ஆண்டுகளில் முதல் முறையாக திருச்சி NIT-ல் அடியெடுத்து வைக்கும் முதல் பழங்குடியின மாணவி ரோகினியை அவர் படித்த அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் சக மாணவர்கள் மத்தியில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்து மடிக்கணினியை பரிசாக பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வழங்கினார்.

மத்திய அரசு நுழைவுத் தேர்வுகள் மூலம் முட்டுக்கட்டைகள் போட்டு விளிம்பு நிலை மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி வரும் இச்சூழலில், எத்தனை தடைக் கற்கள் வந்தாலும் அதை படிக்கற்களாக மாற்றி முன்னேறி மேலே வரும் ரோகினி போன்றோரே "கல்வியில் சிறந்த தமிழ்நாடு" எனும் திராவிட மாடலுக்கு எடுத்துக்காட்டு என்றார்.

அண்ணன் உதயநிதி அவர்கள் தொடர்ந்து எதிர்த்து வரும் அறமற்ற நுழைவுத் தேர்வுகள் நீங்கும் வேளையில் விளிம்பு நிலையில் இருக்கும் இன்னும் பல்லாயிரக்கணக்கான மாணவ செல்வங்களை தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வர் என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision