உழவர் சந்தை மைதானத்தில் இஸ்லாமியர்கள் கூட்டாக ரம்ஜான் சிறப்பு தொழுகை

உழவர் சந்தை மைதானத்தில் இஸ்லாமியர்கள் கூட்டாக ரம்ஜான் சிறப்பு தொழுகை

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒரு கடமையாக ஆக்கப்பட்டுள்ளது. இதனைக் கடைபிடிக்கும் வகையில் ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொண்டனர். 30 நாள்கள் நோன்பிற்கு பிறகு இன்று உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ரமலான் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் திறந்தவெளியில் ரமலான் தொழுகையை நிறைவேற்றினர்.

இதில் குழந்தைகள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO