1330 திருக்குறளுக்கு நடனம் - 13 வயது மாணவன் உலக சாதனை
திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மேட்டூர் வீரக்கல்புதுார் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் திருக்குறள் பாடலுக்கான நடனமாடும் உலக சாதனை நிகழ்வு சேலம் மாவட்டம் மேட்டூர் ராமன்நகரில் நடந்தது. வீரக்கல்புதூர் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மூவேந்தர்பாண்டியன் தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரங்கநாதன், ஆல் இந்தியா புக் ஆப் ரெகார்ட் நிறுவனத் தலைவர் வெங்கடேசன், வேலூர் முத்தமிழ் சங்க தலைவர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், திருச்சி உறையூரைச் சேர்ந்த, பணி நிமித்தமாக தற்போது மேட்டூரில் வசித்து வரும் மணிவண்ணன் – லாவண்யா தம்பதியினரின் மகனான 8ம் வகுப்பு மாணவன் மோனிஷ் (13), ஆயிரத்து 330 திருக்குறள் பாடல்களுக்கும், தொடர்ந்து 5 மணி நேரம் 13 நிமிடங்கள் நடனமாடி உலக சாதனை நிகழ்த்தினார். மாலை 6 மணி 6 நிமிடத்தில் தொடங்கிய திருக்குறள் நடனநிகழ்ச்சி இரவு 11 மணி 19 நிமிடத்க்கு முடிந்தது.
முடிவில், பேரூராட்சி செயல் அலுவலர் மூவேந்தர் பாண்டியன், மோனிஷூக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மணிவண்ணன் வரவேற்றார். இல்லம்தேடி கல்வி திட்ட தன்னார்வலர் லாவண்யா நன்றி கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision