திருச்சியில் நேற்று (25.09.2023) பெய்த மழையின் அளவு

திருச்சியில் நேற்று (25.09.2023) பெய்த மழையின் அளவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று (26.09.2023) இரண்டு மணி நேரம் கன மழை பெய்தது. மிக முக்கியமாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .கோடை காலத்தில் இருக்கும் வெப்பம் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மழை பெய்தது பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது. மாநகரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளும் பாதாள சாக்கடைகள் தோண்டப்பட்ட பள்ளங்களிலும் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. சில இடங்களில் ஆறு போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

இதில் லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடியில் 18.4 மி.மீ, லால்குடி 12.4 மி. மீ, நாத்தியார் ஹெட் 25.6 மி. மீ, புள்ளம்பாடி 22 மி. மீ, மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட தேவிமங்கலம் 23.2 மி. மீ, சமயபுரம் 26.4 மி. மீ, சிறுகுடி 20.2 மி. மீ, வாதலை அணை 10.6மி. மீ, மணப்பாறை வட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை 1.6 மி. மீ, பொன்னியாரம் 3.2 மி. மீ, மருங்காபுரி 3.2 மி. மீ, முசிறி 9 மி. மீ, புலிவலம் 2 மி. மீ, தாத்தையங்கார் பேட்டை 10மி. மீ, ஸ்ரீரங்கம் வட்டத்துக்கு உட்பட்ட நாவலூர் கொட்டப்பட்டு 2.5 மி. மீ, திருவரம்பூர் வட்டத்திற்கு உட்பட்ட துவாக்குடி 15.3 மி. மீ, துறையூர் வட்டத்திற்குட்பட்ட கொப்பம்பட்டி 10மி. மீ, தென்பரநாடு 27மி. மீ, துறையூர் 40மி. மீ, திருச்சி கிழக்கு கோல்டன் ராக் 4.8மி. மீ, விமான நிலையம் 17.8மி. மீ, திருச்சி மேற்கு ஜங்ஷன் 06 மி. மீ, டவுன் 15 மி. மீ என மொத்தம் 326.2 மி. மீ என மழை பெய்துள்ளது.