குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேயர் திடீர் ஆய்வு

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேயர் திடீர் ஆய்வு

திருச்சி மாநகராட்சி ஒரு சில பகுதிகளில் குடிநீர் கலங்கலாக வருவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் மேயர் மு.அன்பழகன், பொறியாளர்களுடன் அய்யாளம்மன் படிதுறையில் உள்ள குடிநீர் சுத்திக்கரிப்பு நிலையம் மற்றும் அண்ணா நகர் உழவர் சந்தையில் அமைந்துள்ள மேல் நீர் தொட்டி மற்றும் குடிநீர் திறக்கும் வாழ்வு பகுதியிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

இந்த ஆய்விற்கு பிறகு மேயர் கூறுகையில்.... மாநகரில் உள்ள அனைத்து மேல்நிலை நீர் தெற்கு தொட்டிகள், தண்ணீர் ஏற்றக்கூடிய குடிநீர் வாழ்வு தொட்டிகளையும் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யவும், தினந்தோறும் வார்டு பகுதி மற்றும் தெருப் பகுதிகளில் தண்ணீர் வரும்போது அதனை ஆய்வு செய்யவும், பொதுமக்கள் புகார் தெரிவித்தவுடன் உடனடியாக அப்பகுதியில் சென்று துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் இடங்களில் தினந்தோறும் குடிநீர் குழாய்களை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மேயர் மு.அன்பழகன் அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வில் செயற்பொறியாளர் கே. எஸ். பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் சரவணன், பிரசாந்த் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision