திருச்சியில் ரயில் முன்பு பாய்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை.

திருச்சியில் ரயில் முன்பு பாய்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் தற்கொலை.

திருச்சி மொராய்ஸ் சிட்டியை சேர்ந்த ராஜசேகர் மகன் கோகுலகிருஷ்ணன் (40). பி.எஸ்.என்.எல்லில் தற்காலிகமாக வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு காயத்ரி (32) என்பவருடன் திருமணமாகி கிருஷ்ணதேவ்(6) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்தாகி இருவரும் பிரிந்து வசித்து வந்தனர்.

கோகுலருஷ்ணனுக்கு சரிவர வேலை இல்லாததால் மன உளைச்சலிலும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திருச்சி நெ.1டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் கோகுல கிருஷ்ணன் வந்துள்ளார். பின்னர் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்த அவர் திருச்சி - சென்னை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்துள்ளார்.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடலில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதனையடுத்து கோகுலகிருஷ்ணன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கோகுல கிருஷ்ணன் தாய் சூரியகலா (65) கொடுத்த புகாரின் பேரில் ராயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision