அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியும் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த எம்.பி

அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பூங்கா அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியும் திட்டப் பணிகளை தொடங்கி வைத்த எம்.பி

திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், தென்புறநாடு ஊராட்சியில் பச்சைமலை, டாப் செங்காட்டுப்பட்டியில் ரூபாய் 4.26 கோடி மதிப்பீட்டில் சாகச் விளையாட்டுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் பொருத்துதல், ஜியோ டும் (Geo Dome) விடுதி கட்டுதல், ஜிப்லைன் டவர் மற்றும் சாகச விளையாட்டுகளுக்கான கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பூங்கா அமைக்கும் பணிகளுக்கு பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் வைரிசெட்டிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 28.94 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும், ரூபாய் 13.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், சிறுநாவலூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும்,

ரூபாய் 8 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீர் வழங்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர சுத்திகரிப்பு நிலையத்தையும், பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 12.51 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தானியக் கிடங்கு கட்டிடத்தையும், ரூபாய் 12.61 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், ரூபாய் 26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம கூட்டுறவு வங்கி கட்டிடத்தையும்,

கண்ணணூர் ஊராட்சியில் ரூபாய் 30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடத்தையும், முத்தையம்பாளையம் ஊராட்சியில் ரூபாய் 42.65 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி செயலக கட்டிடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக (02.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற அரசு விழாக்களில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சித்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் குமார். உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா முத்துச்செல்வன், துறையூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரண்யாமோகன்தாஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision