திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருச்சியில் உயர்மட்ட பாலம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் - அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள்  கே.என்.நேரு, எ.வ.வேலு, மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, செய்தியாளர்களிடம் கூறுகையில்…. தமிழகத்தில் உள்ள இரு வழி மற்றும் நான்கு வழிச்சாலை பணிகள் பாதியிலேயே நிற்கிறது. இந்த பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவுற்ற பின்னர் சாலையின் இருபுறமும் அதிக மரங்கள் நடுவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சாலை விரிவாக்கத்திற்காக நில கையகப்படுத்தும் பணிக்காக 5 சிறப்பு டிஆர்ஓக்கள் நியமிக்கப்பட உள்ளனர். திருச்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள 215 தரை மட்ட பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக மாற்றபடும். ஊராட்சி ஒன்றிய சாலைகளை மாநகர சாலை தரத்திற்கு இணையாக போட வேண்டும் என்று எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த சாலைகள் தரமாக அமைக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

எங்களுடைய ஆட்சியில் மோனோபோலி இல்லை. பத்திரிகைகளில் அப்படி வளம் வருவதை பார்கிறேன். இனி டெண்டர்கள் பரவலாக்கப்பட்டு அதன் அடிப்படையில் தான் நடைபெறும். கட்டிடங்கள் கட்டும் போது தண்ணீர், மணல் போன்றவற்றை முறையாக பரிசோதனை செய்த பின்னரே கட்ட வேண்டு என்பதை நான் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறேன். திருச்சியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் அமைக்க பரிசீலனை செய்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn