சுதந்திர போரட்ட வீரர்களின் நினைவிடங்களை தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவித்து அவற்றை பராமரிக்க வேண்டும் ABVP அமைப்பினர் கோரிக்கை
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு பல்வேறு ஆக்கப் பூர்வமான பணிகளை செய்து வருகிறது. ஆண்டிற்கு இருமுறை நடைப்பெறும் ABVP யின் தேசியசெயற்குழு கூட்டமானது இந்த ஆண்டு கொரோனா வழிமுறைகளை பின்பற்றி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஆகஸ்ட் மாதம் 1ந்தேதி நடைப்பெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் தேசிய பொறுப்பாளர்கள் நேரிலும் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் ஆன்லைன் மூலமாகவும் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் இரண்டு வகையான தீர்மானங்கள் மற்றும் ஆகஸ்ட் 15 குறித்த இளைஞர்களுக்கான அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவோதய பள்ளிகள் துவங்கபட வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கை நடைமுறைபடுத்துதல் என்ற கோரிக்கை உட்பட பல்வேறு கல்வித்துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதானுடன் கலந்துரையாடல் சந்திப்பு நடைபெற்றது. சுதந்திர போரட்ட வீரர்களின் நினைவிடங்களை தேசிய நினைவுச் சின்னங்களாக அறிவித்து அவற்றை பராமரிக்க வேண்டும். என்ற கோரிக்கை தொடர்பாக மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீகிஷன்ரெட்டியயுடன் சந்தித்து பேசியுள்ளனர்.
மேலும் ABVP அமைப்பானது, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற பாரத தேசத்தின் பெருமைக்குரிய மாவீரர்களுக்கு ABVP சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் பாரத தேசத்தின் பெருமைக்குரிய வீரர்கள் ஒரு தங்கபதக்தையும், இரண்டு வெள்ளி பதக்தையும், நான்கு வெண்கல பதக்தையும் வென்று பாரத தேசத்திற்கு பெருமை சேர்த்திருகிறார்கள்.
வெற்றி பெற்றவர்களது கருத்துக்களின் அடிப்படையில் இதுவரை நமது நாட்டில் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இனி வரும் நாட்களில் விளையாட்டுத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கல்லூரிகளில் உடற்கல்வியியல் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வரும் காலங்களில் அதிகமாக பதக்கங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் எனABVP கேட்டுக் கொள்கிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று தமிழகத்தில் ABVP சார்பாக 1750 இடங்களில் தேசிய கொடி ஏற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகச்சிறப்பாக கொண்ட ABVP திட்டமிட்டுள்ளது. மாணவர்கள் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க அனைத்து தமிழக மாணவர்களுக்கும் ABVP அழைப்பு விடுக்கின்றது. இளைஞர்கள் 8883806211 இந்த எண்ணை தொடர்பு கொண்டு தங்களது பெயரினைபதிவு செய்து கொள்ளலாம். 1 இலட்சம் கிராமங்களில் நமது புனிதமான மூவர்ண கொடியினை ABVP பொறுப்பாளர்கள் ஏற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கொரோனா முன்களப்பணியாளர்கள் மூலமாக தேசிய கொடியினை ஏற்றிட திட்டமிடப்பட்டுள்ளது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn