மோடி அரசை கண்டித்து திருச்சியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை அறிவுறுத்தலின்படி இன்று ஆகஸ்ட் 9ம் தேதி நாடு முழுவதும் நடைபெறும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், இந்திய நாட்டையும், மக்களையும், தொழிலாளர்களையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும்,
படித்து முடித்து வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் இளைய தலைமுறையினரின் வாழ்வினையும், பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டும், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்டும் அடக்க முற்படும் பாஜகவின் மோடி அரசை கண்டித்து
திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருச்சி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மத்திய சங்க நிர்வாகிகள், மற்றும் பணிமனை நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் முன்னோடிகள், உறுப்பினர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn