ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகளாக இயங்கி வந்த 10 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகமே அங்கு பணியாற்றக்கூடிய கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கி வந்தது. 

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. அரசு அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்த நிலையில், அரசு கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்ட உறுப்பு கல்லூரியின் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பல்கலைக்கழகத்தின் மூலம் ஊதியம் வழங்கினால் நிதி பற்றாக்குறை ஏற்படும்.

எனவே அவர்களுக்கு ஊதியம் வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இது தொடர்பாக அரசை முறையிட வேண்டுமே தவிர பல்கலைக்கழகத்தை அல்ல என்ற கோரிக்கையை முன்வைத்தும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லா அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision