பா.ஜ.க வுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்று திருச்சியில் டி.ராஜா பேட்டி

பா.ஜ.க வுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்று திருச்சியில் டி.ராஜா பேட்டி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் மாநில குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜா... வரும் சட்டமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது. பா.ஜ.க இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு, பன்முகத்தன்மைக்கும், ஜனநாயகத்திற்கும் பெரும் அச்சுறத்தலை ஏற்படுத்தி வருகிறது. மதச்சார்பு தன்மையை தகர்த்து வருகிறது. இந்தியாவை மத ரீதியாக கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம், ஜனநாயகத்தை காக்க வேண்டிய முக்கிய கடமை நமக்கு உள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பு மத்திய பா.ஜ.க அரசின் வீழ்ச்சியின் தொடகத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாடு சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் முன்னேறிய மாநிலம். ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க அவர்களின் செயல்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முடியாது. பா.ஜ.க வுடன் யார் கூட்டணி வைத்தாலும் அவர்களை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள். இந்தியாவை, அரசியலமைப்பு சட்டத்தை, ஜனநாயகத்தை காப்பாற்றுவது மிக முக்கிய கடமையாக இருக்கிறது. தமிழர்கள் உரிமைகள் காப்பதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தோல்வி அடைந்துள்ளது.

மக்கள் தற்போது ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்து வருகிறார்கள். தமிழக மக்கள் பல்வேறு விவகாரங்களுக்காக போராடுகிறார்கள், தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகிறது. அதற்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி அரசு தான் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH