திருச்சி சிப்காட் வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலர்களுக்கு ஆலோசனை
பாரத சாரண, சாரணியர் இயக்க தேசிய தலைமையகத்தின் அனுமதியோடு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனையின்படி திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் வருகின்ற (28.01.2025) முதல் (03.02.2025) வரை பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதற்காக பெருந்திரளணி சபை, திட்டக்குழு, தொழில்நுட்பக்குழு, செயல்பாட்டுக்குழு மற்றும் 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இயக்குநர்களும் குழுஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், தினசரி நிகழ்வுகளாவும், போட்டிகளாகவும், சாரண சாரணிய திறன்கள், ஆக்கல்கலைத் திட்டம், ரங்கோலி, நாட்டுப்புற நடனம், திறன்வெளிப்பாடு, அணிகூட்டம், உலகளாவிய கிராமம்,
இளைஞர் மன்றம், உணவுத் திருவிழா, ஒருமைப்பாட்டு விளையாட்டு, பல்வண்ண ஒப்புனை பேரணி, வேடிக்கை செயல்பாடுகள், வீர தீர செயல்பாடுகள், அறிவுசார் செயல்பாடுகள், இரவு நடைபயணம், மிதிவண்டி பயணம், ராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறை சாகச நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.
இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் கலாச்சாரம், பண்பாடு குறித்த செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்ட உள்ளனர். இந்த பெருந்திரளணி நிகழ்விற்காக மேடை அமைக்கும் பணிகள் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் கூடாரங்கள் அமைக்கும் பணிகள், மின்சார வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள், மின் விளக்குகள், சமையற் கூடங்கள்,
முக்கிய பிரமுகர்களுக்கான அறைகள், மருத்துவமனை, மார்க்கெட் பகுதி, சாலை அமைப்பது, தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது மற்றும் அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அதை கண்காணிப்பு செய்யும் இடம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது,
இப்பணிகளை இன்று (16.01.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision