சத்தான உணவு மற்றும் பாரம்பரிய நெல் விதைகள் குறித்து கண்காட்சி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுமயங்குடி கிராமத்தில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு அனைவருக்கும் சத்தான உணவு என்னும் தலைப்பில் ஊட்டச்சத்து வாரம் மற்றும் பாரம்பரிய நெல் விதைகள் குறித்து கண்காட்சி நடத்திய காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்கள்.
லால்குடி சுற்று வட்டார பகுதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழக வேளாண்மை மற்றும் கால்நடை அறிவியல் கல்லூரியின் இளங்களை இறுதியாண்டு மாணவர்கள்.சிவ இன வரதன், ரூபன், தமிழ் முழக்கன், கருப்பண்ணன், ஜெய்சன் ஐசக் ஆகியோர் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் விவசாயம் சார்ந்த பல்வேறு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு குறித்த பணிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய ஊட்டச்சத்து வாரம் செப்டம்பர் 1ம் ந்தேதி முதல் 7-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக லால்குடி அருகே சிறுமயங்குடி கிராமத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு அனைவருக்கும் சத்தான உணவு என்னும் தலைப்பில் ஊட்டச்சத்து வாரம் மற்றும் பாரம்பரிய நெல் விதைகள் குறித்து கண்காட்சி நடத்தினர்.
இந்த கண்காட்சியில் இலுப்பைப்பூ சம்பா, வெள்ளை பால், குடவாழை, இரத்தசாலி, ஆத்தூர் கிச்சடி சம்பா, அன்னமழகி, சின்னார் அறுபதாம் குறுவை, கல் உருண்டை சம்பா கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சிவன் சம்பா, மிளகு சம்பா உள்ளிட்ட 13 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை காட்சிப்படுத்தி அதன் நன்மைகள் குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தனர். மேலும் ஊட்டச்சத்துகளால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மாணவர்கள் விளக்கிக் கூறினர்.
இந்நிகழ்வில் லால்குடி வேளாண்மை உதவி இயக்குனர் சுகுமார், உதவி வேளாண்மை அலுவலர் எடிசன், கிராம நிர்வாக அலுவலர் அந்தோணிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் குழந்தைவேல், மற்றும் சிறுமயங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision