எஸ் ஆர் எம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அபெக்ஸ் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய துவக்க விழா


திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு அபெக்ஸ் திறன் மேம்பாட்டு மைய ஹெல்த் கேர் சார்பில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை திறன் மேம்பாடு பயிற்சி மைய துவக்க விழா திருச்சி ராமாபுரம் எஸ்ஆர்எம் குழும தலைவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் நடைப்பெற்றது. விழாவினை லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் குத்துவிளக்கேற்று துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு  கழகத்தின் அங்கமான தமிழ்நாடு அபெக்ஸ் திறன் மேம்பாட்டு மைய ஹெல்த் கேர் சார்பில் உயிர் காக்கும் உயர் சிகிச்சை திறன் மேம்பாடு பயிற்சி மையத்தின் நோக்கம் விஷ ஜந்துகள் கடித்தாலோ, நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மிதந்தவர்ரகளை உயிர்பிழைக்க செய்யும் முதலுதவி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி கொடுப்பது உள்ளிட்டவைகளுக்கு மருத்துவர்களையே முழுமையாக நம்பியிராமல், கிராம பகுதியில் உள்ள சாதாரண மனிதர்களும் மருத்துவ முதலுதவி செய்யும் வகையில் இப் பயிற்சி நடைபெறவுள்ளது.

இப்பயிற்சியின் நோக்கம் குறித்து டாக்டர் என். சேதுராமன், தலைமை இயக்குனர் SRM குழும நிறுவனங்கள் (ராமபுரம் & திருச்சி வளாகம்)... எஸ்.வி. சீனிவாசன், நிர்வாக இயக்குனர், பிஹெச்இஎல், திருச்சிராப்பள்ளி....சரவணன், GM & ICML தலைவர் ஐடிசி உணவுப் பிரிவு, விராலிமலை, புதுக்கோட்டைகிளமென்ட் பர்னபாஸ், Dy.  தலைமை மெக்கானிக்கல் இன்ஜினியர் கோல்டன் ராக், தெற்கு ரயில்வே, திருச்சிராப்பள்ளி, எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி துணை இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி உள்ளிட்டோர் பேசினர். விழாவில் எஸ் ஆர் எம் மருத்துவ கல்லூரி வளாக இயக்குனர் டாக்டர் மால்முருகன், மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn