திருச்சி மாவட்டத்தில் நோய் தாக்கத்தால் செத்து மடியும் மாடுகள் - கால்நடை முகாம் அமைக்க கோரிக்கை

திருச்சி மாவட்டத்தில் நோய் தாக்கத்தால் செத்து மடியும் மாடுகள் - கால்நடை முகாம் அமைக்க கோரிக்கை

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி தாலுகா பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. மாடுகளில் பால் கறந்து விற்று மக்கள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சில நாட்களாக மாடுகள் கோமாரி நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி வருகின்றன. இதனால் மாடுகளின் கால்களில் புண் ஏற்பட்டு அவை நடக்க முடியாமலும், உணவு சாப்பிடாமலும், வலியுடனைடன் சில நாட்களில் செத்து விடுகின்றன.

மாடுகளை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மாட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்டாலும், பயனற்று போய் மாடுகள் தினம் தினம் செத்து மடிகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் கோமாரி நோய் உள்ளிட்ட நோய்த் தாக்குதலால் அதிகரித்து வருகிறது. 

கால்நடை மருத்துவமனைகளில் போதிய சிகிச்சை அளிக்காத நிலையில் தனியார் கால்நடை மருத்துவமனைகளை நாடி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே வறுமையில் சிக்கித் தவிக்கும் விவசாயிகள் தற்போது மாடுகளுக்கு நோய் தாக்கத்தினால் எண்ணி மிகுந்த வேதனைக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே கால்நடை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை முகாம்கள் அமைத்து, கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொண்டும், மாடுகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn