திருச்சி தேசியக் கல்லூரியில் நூலக புத்தாக்க பயிற்சி

திருச்சி தேசியக் கல்லூரியில் நூலக புத்தாக்க பயிற்சி

தேசியக் கல்லூரியின் முதலாண்டு பயிலும் இளநிலை, முதுநிலை சேர்ந்துள்ள மாணவர்களுக்கான நூலக விதி முறைகள் மற்றும் பயன்பாடுகள் பற்றிய பயிற்சி 04.08.2022 வியாழன் நண்பகல் நூலக அரங்கிள் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர். R. சுந்தரராமன் அவர்கள் நிகழ்விற்குத் தலைமையேற்று உரையாற்றினார். அவர் தமது தலைமையுரையில் மாணவர்கள் நூலகத்தை எவ்வாறு பயனுள்ள முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கினார். மேலும் வளர்ந்து வரும் நவீன உலகில் கணினியைப் பயன்படுத்தி நூல்களைப் பயன்படுத்தும் முறையை விளக்கியதோடு இக்கல்லூரி அதற்குரிய வசதிகளை நிறைவேற்றி உள்ளது எனவே மாணவர்கள் பயனுள்ள முறையில் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.

கல்லூரிச் செயலர் திரு. கா.இரகுநாதன் அவர்கள் கணினி முறைமற்றும் நவீன RFID மூலம் மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் நூலகஅடையாள அட்டையை மாணவர்களுக்கு வழங்கினார். ஓய்வு பெற்ற முன்னாள் கல்லூரி நூலகரும் சிறப்பு விருந்தினருமான முனைவர். P. ராகவன் நூலகத்தில் உள்ள எல்லா நூல்களும் முறையாகக் கணினி மயமாக்கப்படுவதற்கு ஆதரவு நல்கிய செயலர். முதல்வர் ஆகியோருக்கு நன்றி பாராட்டினார் நூல்களை பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகளை அவர் எடுத்துரைத்தர்,

நூலகர் முனைவர். T. சுரேஷ்குமார் கல்லூரி நூலகத்துறையில் புதிதாகஉருவக்கப்பட்ட இணையதள உதவியுடன் உருவக்கப்பட்ட மென்பொருள் மூலம்நுல்கள் மற்றும் வினாதாள்கள், குறும்படம் எவ்வாறு தேடிப்பயன்படுத்தவேண்டும் என்பதையும் கல்லூரி நூலகத்துறையின் வாயிலாக முதன் முதாலாக் உருவக்கப்பட்ட மென்பொருள் உதவியுடன் பயனாளர்கள் தங்கள் அலைபேசி மற்றும் கணினி மூலம் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து நூலகம் பயன்படுத்தும் முறையும் மாணவர்களுக்கு விளக்கினார். தேசிய கல்லூரி நூலகதுரையின் கீழ் இயங்கும் தட்டச்சு பயிற்ச்சிமையம், TNPSC பயிற்சிக்கு வகுப்பு, எழுத்துக்கலை பயிற்ச்சி. மற்றும்நூலகத்துறையினால் வழங்கப்படும் நூலக மற்றும் தகவல் அறிவியல் சான்றிதல்

படிப்பை பற்றியும் எடுத்துரத்தார். இதன் நன்மைகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு துறை மாணவர்களுக்கும் ஒவ்வொரு நாள் என்ற முறையில் இப்பயிற்சி தொடரும் என்பதையும் தெரிவித்ததார். கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் இம்முறையை இம்மாதத்திற்குள் தெரிந்து கொள்ள இப்பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும் என்றார். இவ்விழாவில் நூலகஅலுவலர் அன்புமனி அவர்கள் வரவேற்ப்பு வழங்கினிட மற்றும் உதவி நூலகர் அராதாஜெயலெட்சுமி அவர்கள் நன்றி கூறினர் இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திராளாக பங்கு பெற்றனர்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO